புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் நேற்று சென்னையில் காலமானார். தமிழ், மலையாள திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் சிறந்த கலைஞராக வலம் வந்தவர். இவரது உடலுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் மேலாளர் தாமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.