கூலி பார்க்க வந்த ரசிகர்கள் - டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்
குழந்தைகள் கூலி படம் பார்க்க அனுமதி மறுப்பு- பெற்றோர்கள் வாக்குவாதம்
சென்னை மீனம்பாக்கம் திரையரங்கில் கூலி படத்தை பார்க்க குழந்தைகளை அனுமதிக்காத நிலையில், பெற்றோர்கள் திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய வளாகத்தில் ஏரோ ஹப்பில் உள்ள திரையரங்கில் கூலி திரைப்படம் பார்க்க, பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கு "ஏ" சான்றிதழ் உள்ளதால் குழந்தைகள் பார்க்க அனுமதி இல்லை என, திரையரங்கு ஊழியர்கள் கூறிய நிலையில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிக்கெட்டிற்கான பணம் திருப்பி தரப்படும் என கூறியதால் பெற்றோர்கள் அமைதியாக சென்றனர்.