தலைவர் 173ஐ இயக்கப்போவது டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி?
சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் 173வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் அவர் வெளியேறினார். இந்நிலையில் யார் இயக்குனர் என இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.