காப்பிரைட்ஸ் விவகாரம் - தேவாவின் அதிரடி அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகர்கள்

Update: 2025-02-12 05:06 GMT

தன்னுடைய பாடல்களை பயன்படுத்தினால், அதற்காக Copy Rights கேட்க போவதில்லை என இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றில் பேசியுள்ள அவர், தனது பாடல்களை தற்கால இயக்குநர்களும் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால், அதன்மூலம் இளம் தலைமுறை ரசிகர்களுடன் தான் இணைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் தன்னுடைய பாடல்களை 2K கிட்ஸ் தேடித்தேடி ரசிப்பதே தனக்கு போதுமானது என்றும், அந்த ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது என்றும் தேவா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Copy Rights விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் தேவாவின் பதில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்