Actor | பெண்களின் ஆடை குறித்த சர்ச்சை பேச்சு -பறந்த நோட்டீஸ்... பிரபல நடிகர் ஆஜர்
பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி தெலுங்கு நடிகர் சிவாஜிக்கு தெலங்கானா மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அவர் மகளிர் ஆணையத்தில் ஆஜரானார். திரைப்பட விழாவொன்றில் பேசியிருந்த அவர் "அழகு என்பது முழுமையான உடையில் தான் உள்ளது... உடல் அங்கங்களை வெளிப்படுத்துவதில் அல்ல" என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவருக்கு தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் நேரில் ஆஜரானார்.