இந்தியாவை சிதைக்க நினைத்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியை அலறவிட்ட சென்னை கோர்ட்

Update: 2025-09-12 02:48 GMT

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி அமீர் சுபைர் சித்திக் ஆஜராக உத்தரவு

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி அமீர் சுபைர் சித்திக் நேரில் ஆஜராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி அமீர் சுபைர் சித்திக், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரகத்தில் வீசா ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் இந்திய கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதுடன், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், இலங்கையைச் சேர்ந்த முகமது சாகிர் ஹுசைன் என்பவரை தமிழக காவல் துறை கைது செய்தது.

விசாரணையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், தென் இந்தியாவில் உள்ள பொது இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவ‌வாக உள்ள அமீர் சுபைர் சித்திக் செப்டம்பர் 15 ம் தேதி நேரில் ஆஜராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்