பிஹாரில் பள்ளி கழிவறையில் எரிந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சமாதானப்படுத்த வந்த காவலரை உறவினர்கள் தக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்னாவில் உள்ள கர்தானிபாக் பகுதியில் அம்லா தோலா என்ற பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சோயா பர்வீன் என்ற 12 வயது மாணவி, பள்ளியில் உள்ள கழிவறையில் உடல் முழுவதும் தீ காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் . இந்நிலையில் மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறி அவரது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சமாதானப்படுத்த வந்த காவலரை தாக்கி, பெற்றோர்கள் பள்ளி அறையில் பூட்டியதால் பரபரப்பு நிலவியது.