காலை 9 மணி தலைப்பு செய்திகள் (21-05-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-05-21 04:23 GMT
  • கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு...
  • தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 15 சென்டிமீட்டர் மழைப்பதிவு.....
  • தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக உயர்வு...
  • கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு....
  • கேரளாவின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை...
  • கர்நாடகாவின் குடகு, சிக்மகளூரு, உத்தரகன்னடா மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
  • கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி....
  • ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்...
  • அரக்கோணத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...
  • அரக்கோணம் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கம்..
  • செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய நபரை நீண்ட தூரத்திற்கு, லாரியில் தொங்கியபடியே சென்று பிடித்த போலீஸ்...
  • சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் பேரிகார்டுகளையும் மீறி லாரியை கடத்திச் சென்ற நபர்....
  • மறைமலைநகர் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்ட லாரி....
  • லாரியை கடத்தி சென்ற சுபாஷுக்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை....
  • செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திச் சென்ற சுபாஷ் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்...
  • செங்கல்பட்டு அருகே, லாரியை கடத்திய நபர், சில நாட்களுக்கு முன், பெண் மீது கொதிக்கும் பாலை ஊற்றிவிட்டு தப்பியோடியது அம்பலம்..
  • ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியில் நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது
  • சென்னை கத்திப்பாரா மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான கார்...
  • சிவகங்கை கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருக்கும் 5வது நபரின் உடலை மீட்க அதிநவீன இயந்திரங்களுடன் வந்துள்ள பேரிடர் மீட்புப்படை..
  • சிவகங்கை கல்குவாரியில் மழை காரணமாக விபத்து நடந்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்...
  • ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறை...
  • நடிகர் ரவி மோகனுடனான பிரச்சினைக்கு 3வது நபரே காரணம் என மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை...
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது...
  • புதுச்சேரி ஆரியாங்குப்பம் பகுதியில், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறை....
  • காரைக்கால் - பேரளம் இடையேயான இறுதி கட்ட அதிவேக ரயில் சோதனை வெற்றி...
Tags:    

மேலும் செய்திகள்