Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-26 02:00 GMT
  • வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
  • நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு...
  • நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்...
  • உதகையில் கனமழையால் மரம் முறிந்து விழுந்து, குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழப்பு....
  • கூடலூரில், சுண்ணாம்பு பாலம் ஆற்றை வாகனத்தில் கடக்க முயன்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கேரள சுற்றுலா பயணிகள்...
  • கனமழை காரணமாக கோவை நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு...
  • திருச்சூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஜாம்நகர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மீது முறிந்து விழுந்த மரம்...
  • தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க தடை.......
  • செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை...
  • அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும்? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...
  • வருங்காலத்தில் பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
  • ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி...
  • ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது? என்பது குறித்து மனம் திறந்த சி.எஸ்.கே கேப்டன் தோனி...
  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய கிளாஸன்
  • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதபோதும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதீஷ்குமார்...
  • உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலில் ட்ரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க திட்டம்....
  • யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில், பெரியார் பெயருடன் சாதி பெயரையும் சேர்த்து கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு...
  • ஆளுநரை கேள்வி கேட்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என யுபிஎஸ்சி தேர்வில் சர்ச்சை கேள்வி..
  • சென்னையில் பாஜக சார்பில் நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கிறார்....
  • கேரளாவில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு...
  • நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...
  • சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள தனியார் மருத்துவமனையில், வாய் புண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை செய்ததால் அதிர்ச்சி...
  • சிவகங்கை மாவட்டம் துவார் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சிறுவன் உயிரிழப்பு...
  • கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பம்...
  • கோவையில் அடாது மழை பொழிந்தாலும், இடைவிடாது இசை மழை பொழியும்...


Tags:    

மேலும் செய்திகள்