உச்சநீமன்றத்தில் ஆஜரான யாசின் மாலிக்.. - அதிர்ச்சியில் உறைந்த நீதிபதிகள்
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் யாசின் மாலிக், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், யாசின் மாலிக் மீதான மற்றொரு வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவிடாத பட்சத்தில் யாசின் மாலிக் நேரில் ஆஜரானதைக் கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, தேவைப்பட்டால் காணொலி வாயிலாக யாசின் மாலிக் ஆஜராகலாம் என தெரிவித்த நீதிபதி, வழக்கை நான்கு வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை செயலருக்கு சொலிசிட்டர் துஷார் மேத்தா கடிதம் எழுதியுள்ளார். அதில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய யாசின் மாலிக் தப்பிக்க முயற்சிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருந்தால் உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.