Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-10-06 00:49 GMT

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்தது போன்று பிரதமர் மோடி கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பிரதமர் மோடி பேசுவது முறையா? எனவும் பிரதமரின் பார்வையில் தவறு இருப்பதாகவும் கடும் தாக்கு

கடலூரில் 17 ஏக்கரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்.வள்ளலார் 200 ஓராண்டு தொடர் அறநிகழ்வு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.....

சட்ட போராட்டம் நடத்தி, மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு விரைவில் அனுமதியை பெறும்..கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உறுதி...

மேட்டூர் அணையின் நீர்மட்டம், 6 ஆண்டுகளுக்கு பின் மிகக் கடுமையாக சரிவு...33 அடிக்கு குறைந்ததால், விவசாயிகள் கவலை...

டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு..முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..

காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை...திருவண்ணாமலை, ஓசூர், நாட்றாம்பள்ளி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு...தமிழக அரசு தகவல்...

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் செல்கிறார்...டிரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து போலீசார் உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்