Today Headlines |காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines |காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2025) | 6 AM Headlines | ThanthiTV;

Update: 2025-05-23 00:52 GMT
  • வரும் ஜூன் 2ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்... அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பதற்காக தயாராக இருக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவு...
  • கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி... தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு...
  • டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் புலன் விசாரணைக்கு தடை... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு....
  • டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது.. கூட்டாட்சிக்கு எதிராகவும் அமலாக்கத்துறை செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டிப்பு..
  • பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... தமிழகத்திற்கு தேவையான நிதியை தரும்படி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்ப்பு...
  • வங்கக் கடலில் வரும் 27ஆம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு....
  • கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டையில் சதம் அடித்த வெயில்...கோடை வெப்பம் தணிந்த போதும் 2 பகுதிகளில் வாட்டி வதைத்த வெயில்...
  • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு.. ஒரு சவரன் 71 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8 ஆயிரத்து 975 ரூபாய்க்கும் விற்பனை....
  • சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 மணிநேரத்திற்கும் மேலாக மின் தடை... புதிய கட்டுமானப் பணிகளுக்காக ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டும்போது எதிர்பாராத விதமாக மின்சாரக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், மின் விநியோகம் பாதிப்பு...
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால், செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை... 3 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லாததால் வேறு கட்டடத்திற்கு நோயாளிகள் மாற்றம்...
Tags:    

மேலும் செய்திகள்