சேலத்தில் திருவிழாவின் போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓமலூர் அருகே கடந்த வாரம் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும், போலீசார் ராஜமாணிக்கத்திற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் இளைஞர் ஒருவர் ராஜமாணிக்கத்தை தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
இதில் ராஜமாணிக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞரை போலீசார் தேடி வந்த நிலையில், முரளிகிருஷ்ணன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.