மங்கள நாண் இல்லாமல் நடைபெற்ற திருமணம்... அடுத்த நொடியே முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்
சமூக ஆர்வலர் சூரியா சேவியர் இல்லத் திருமண விழாவில்
முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு சந்தன மாலை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில், மங்கள நாண் இல்லாமல் திருமணம் நடை பெற்றதால் மணமக்களுக்கு சந்தன மாலை எடுத்துத் தந்து திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பின் திருமண உறுதி மொழியை நடிகர் சத்தியராஜ் வாசிக்க மணமக்கள் ஏற்றுகொண்டனர். இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ ராசா, அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு,எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்