உலகக் கோப்பை கால்பந்து போட்டி... இணையத்தில் தடையா ? மீறினால்... FIFA World Cup 2022 | Football

Update: 2022-11-20 07:04 GMT

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்ப சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

கத்தாரில் இன்று தொடங்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியா, வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமையை VIACOM -18 நிறுவனம் பெற்றுள்ளது.

பெருந்தொகையை முதலீடு செய்து இந்நிறுவனம் உரிமம் பெற்றுள்ள நிலையில், சட்டவிரோதமாக, இந்த போட்டிகளை பதிவு செய்யவும், மறு ஒளிபரப்பு செய்யவும் இணையதளங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென VIACOM -18 நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில், 12 ஆயிரத்து 37 இணையதள நிறுவனங்கள் தங்களின் காப்புரிமையை மீறும் வகையில் செயல்படும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்ப தடை விதித்தார். மனுதாரர் சமர்பித்துள்ள 12 ஆயிரம் இணையதளங்களை, இணையதள சேவை நிறுவனங்கள் முடக்கம் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்