ஊர் மக்களை வீட்டுக்குள் பூட்டிய கரடி - திணறும் வனத்துறை

Update: 2023-06-12 14:14 GMT

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். வயல்வெளியில் சுற்றிய கரடியை பார்த்த விவசாயிகள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து அங்கு சென்று ஆய்வு செய்த வனத்துறையினர், வாழை தோட்டத்திற்குள் கரடி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து, பழாப்பழத்தை வைத்து கண்காணித்து வருகின்றனர். எந்நேரமும் ஊருக்குள் கரடி வரலாம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்