திடீரென நம்பிக்கை கொடுத்த ரஹானே..ஓவலில் One Man Show..

Update: 2023-06-10 04:39 GMT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 512 நாட்களுக்கு பிறகு களமிறங்கிய ரகானே, முதல் இன்னிங்சில் 89 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதர இந்திய பேட்டர்கள் தடுமாறிய போதும் அசராமல் ஆடிய ரகானே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் அரைசதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும், டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ரகானேவின் இந்த அதிரடி மாற்றத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த சூழலே முக்கிய காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்