பள்ளி பாளையத்தில் போலி டாக்டர் அய்யாவு கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே லட்சுமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. 72 வயதான இவர் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அய்யாவுவை விசாரித்தனர். விசாரணையில் அவர் கணிதவியலில் இளங்கலை பட்டம் பெற்றதும், போலியாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அய்யாவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.