மத்தியப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கு வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்' என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நந்த்லேடா கிராமத்தைச் சேர்ந்த லலித் படிதார் என்ற சிறுவன் ஆறு வயதில் 'வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்' எனும் ஹைபர்டிரிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அந்த சிறுவனின் உடல் முழுவதும் முடி வளர்ந்து காணப்படுகிறது. இது போன்ற அரியவகை நோயால், தற்போது வரை 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.