கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்.. கூட்டமாக விசைப்படகுகளில் பக்தர்கள் பயணம்

Update: 2023-03-03 12:08 GMT

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கச்சத்தீவுக்கு புறப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ராமேஸ்வரத்திற்கு அருகில் கச்சத்தீவு உள்ளது. அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்கு, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, ராமேஸ்வரத்தில் இருந்து, 1200க்கும் மேற்பட்டோர் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் கச்சத்தீவிற்கு சென்றுள்ளனர். மொத்தமாக 2 ஆயிரத்து 408 பேர் கச்சத்தீவு பயணம் செய்ய உள்ளனர். பக்தர்களின் பயணத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்