ஜல்ஜீவன் திட்டம்.. - "ரூ.1000 கொடுத்தால் தான் தண்ணீர்" - குவியும் குற்றச்சாட்டுகள் | thanthi tv

Update: 2022-12-03 16:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு தரப்படும் என கூறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சேவையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதில் வீட்டிற்கு தனியாக இணைப்பு வேண்டுவோர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வழங்கப்படும் என மத்தூர் ஊராட்சி நிர்வாகிகள் பணத்தை வசூல் செய்ததாகவும், பணம் வழங்கியவர்களுக்கு மட்டுமே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் விசாரித்ததில், பணம் வசூலிப்பது தவறான நடவடிக்கை என வருத்தம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்