"ஜெயிலர் பட தலைப்பை மாற்ற சொன்னேன்" - பரபரப்பை கிளப்பிய இயக்குனர்

Update: 2023-07-25 09:51 GMT

ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ஒரே நாளில் ஜெயிலர் என்ற தலைப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குநர் சக்கீர் கோரிக்கை வைத்திருந்தார். எனினும், இதுவரை தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள ஜெயிலர் படமும், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்