ஜனவரியிலே மாரடைப்பு...15 நாட்களில் மனோபாலாவை கொண்டு சென்ற மரணம் | Manobala | RIP

Update: 2023-05-04 02:47 GMT

நேற்று உயிரிழந்த பிரபல இயக்குநரும் நடிகருமான மனோபாலா இறுதிச் சடங்குகள், சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது.

தமிழில் மட்டும் 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ள மனோபாலா, நடிகர் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார்... இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவர் வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் நேற்று காலமானார். மனோபாலாவின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோபாலாவின் இறுதிச் சடங்குகள் இன்று காலை நடைபெறும் என அவரது மகன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்