Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-09-01 00:51 GMT
    • வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர்களின் விலை நள்ளிரவு முதல் 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது...
    • மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியால், சென்னையின் பல்வேறு பகுதிகளில், டீக்கடைகளில் நள்ளிரவு முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது...
    • தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் சுங்க‌க் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த‌து...
    • சென்னையில், எழும்பூர், சென்ட்ரல், சைதாப்பேட்டை, தரமணி உட்பட பல்வேறு பகுதிகளில், இரண்டாவது நாளாக இரவில் விட்டுவிட்டு மழை பெய்த‌து...
    • புதுச்சேரியில் இரவில் பரவலாக மழை பெய்த‌ நிலையில், மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்பு
    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது...
    • சென்னையில் பெய்த கனமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஜெர்மனியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்
    • சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
    • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது
    • இந்தியா - சீனா எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்
    • டிராகனும், யானையும் ஒன்றிணைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வாக இருக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்