Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10.07.2025) | 11 PM Headlines | Thanthi TV
அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தமிழகத்தை மீட்க இறங்கியுள்ளார்...
பாஜகவினரே ஆச்சரியப்படும் அளவுக்கு ஈபிஎஸ்ஸின் செயல்பாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
மாணவர்களின் உயர்கல்வி குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக ஈபிஎஸ்-ஐ கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்...
ஜூலை 14ஆம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு...
கல்லூரிகள் குறித்து, தான் பேசியதை முதல்வர் திரித்து பிரசாரம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
கல்லூரிகள் அரசு சார்பில் தொடங்கப்பட வேண்டும், அப்போதுதான் மாணவர்களுக்கு வசதிகள் முழுமையாக கிடைக்கும் என்றே பேசியதாக ஈபிஎஸ் விளக்கம்...
தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆன்மிக ஆட்சிதான் அமையும்...
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து...
என்னுடைய பெயரை போடக் கூடாது...இனிசியலை போட்டுக்கொள்ளலாம்...
அன்புமணியை மறைமுகமாக சாடிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ்...
தாயாரை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..
தந்தைக்கும், மகனுக்கும் கருத்து மோதல் இருக்கும் நிலையில், ராமதாஸ் இல்லாத நேரத்தில் தைலாபுரம் வருகை...
ஆதார் எண்ணை குடியுரிமை ஆதாரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்..
குடியுரிமையை தீர்மானிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல, அது மத்திய அரசின் வேலை என உச்சநீதிமன்றம் கருத்து...