அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியில் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் வளர்மதி பயபக்தியுடன் மண் சோறு சாப்பிட்டு சாமி தரிசனம் செய்தார்... எடப்பாடி பழனி சாமியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில், மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி 100க்கும் மேற்பட்ட மகளிருடன் தரையில் சாதத்தை வைத்து, ஈபிஎஸ்-ன் நலனுக்காக மனமுருக பிரார்த்தனை செய்து மண் சோறு சாப்பிட்டு காளியை தரிசனம் செய்தார்.