பாம்பு கடிக்கு 'ஃபுட் பாய்சன்' சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்த 8வயது சிறுவன்.. கொந்தளித்த உறவினர்கள்

Update: 2023-01-04 04:53 GMT

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஹரிஷ். கடந்த 30 ஆம் தேதி திடீரென மயங்கி நிலையில், பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். அப்போது, சிறுவன் உணவு ஒவ்வாமையால் பாதித்துள்ள தெரிவித்த மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் பாம்பு கடி என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்