கால்பந்து உலக‌க்கோப்பை நடக்கும் மைதானம் அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து | Qatar

Update: 2022-11-27 02:48 GMT

கத்தாரில் உலக‌க்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகே, அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லுசைல் நகரில் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகே முதல் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. அடுத்த சில மணி நேரத்தில், உம் எபைரியா என்ற இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துகளில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்பு மற்றும் அவசர ஊர்திகள் சென்றதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்