மதுரையில், குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு துணி வாங்க சென்றபோது, தனது பேத்தி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டதாக பெரியசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் தனிப்படை அமைத்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியை முதியவர் ஒருவர் தூக்கிச் செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடி வந்தது அம்பலமானது...