ஒழிந்துவிட்டதாக நினைத்த மக்களுக்கு கொரோனா கொடுத்த ஷாக் - வீட்டை விட்டு வர முடியாத 13 லட்சம் பேர்

Update: 2022-10-29 13:22 GMT

கொரோனா பரவல் அதிகரிப்பால் சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய வர்த்தக நகரமான ஷாங்காயின் யாங்பு மாவட்டத்தில் சுமார் 13 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது...

முடிவுகள் தெரியும் வரை அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்...

மேலும் கொரோனா பரவலைத் தடுக்க அங்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் ஏற்கனவே நாளை வரை ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்