+2 சாதனை மாணவிக்காக ராஜ்பவன் வரலாற்றில் மாற்றப்பட்ட விதி

Update: 2023-05-10 15:51 GMT

குடியரசுத்தலைவர், பிரதமர் தங்கும் விருந்தினர் மாளிகையில் இஸ்லாமிய ஏழை மாணவி தங்க வைக்கப்பட்ட நிகழ்வு, ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறியுள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து பெற்றோருடன் சென்னை வந்த ஷப்ரீன் இமானா, முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என ராஜ்பவன் அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனை படைத்த மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை என ஆளுநர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்