குறுக்கே வந்த டூவீலர்... பதறிய ஓட்டுநர்... பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... நொடியில் நடந்த விபத்து

Update: 2022-12-15 13:39 GMT

ஆந்திர மாநிலம் குப்பம் அருகே, அரசு பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. திருப்பத்தூரில் இருந்து குப்பம் பகுதிக்கு, ஆந்திர அரசு பேருந்து பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்து. அப்போது, குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்