இந்தியாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரன் பதவி விலக வலுக்கும் போராட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் பாஜக கட்சியினரும் அக்கட்சிகளின் கவுன்சிலர்களும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துமீறி அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், போலீசார் கண்ணீர் புகை கொண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முயற்சித்தனர்.
எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால் கைது செய்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.