ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களா நீங்கள்? ஆயுளுக்கே ஆபத்து.. மேலும் பல தீமைகள்

Update: 2022-08-04 07:09 GMT

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களா நீங்கள்? ரொம்ப நேரமாக அமர்ந்திருப்பது கூட பிரச்சினை தான் என்கிறார்கள் மருத்துவர்கள்..

கம்ப்யூட்டர் முன்பாக நீண்ட நேரம் வேலை என்ற சூழலுக்கு நம்மில் பலர்ள ஆளாகி இருக்கிறோம்... ஆனால் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் அமர்ந்திருப்பது ஒரு புகையிலை பிடிப்பதற்கு சமம் என்பதை கேட்டிருக்கிறீர்களா?

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நம்முடைய ஆயுள்காலம் குறைவதாக ஒர் ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்கன் ஜர்னல் ஆப் ப்ரிவென்டிங் மெடிசின் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்க கூடிய தகவலில் அன்றாடம் தொடர்ச்சியாக 3 மணி நேரம் அமர்ந்திருப்பவர்கள் உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாவதாக கூறுகிறது.

மேலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களில் 38 நாடுகளில் சுமார் 3.8 சதவீதத்தினர் வரை உடல் உபாதைகள் ஏற்பட்டு இறப்பதாக பி.எம்.ஜே ஓப்பன் என்ற இதழில் ஆய்வு அறிக்கையில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நம் அன்றாட வாழ்க்கையில் டிவி பார்ப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் அதே டிவி யின் முன்பாக நாம் ஒரு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பது ஒரு சிகரெட்டை பிடிப்பதற்கு சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நகராமல் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நம் ஆயுளில் 2.18 விநாடிகள் குறைகிறதாம். இதனால் ஒட்டுமொத்தமாக நம் ஆயுள்காலத்தில் 1 வருடம் 4 மாதங்கள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதிகாலையிலேயே உடற்பயிற்சி, சத்தான உணவுகள் சாப்பிட்டதாக நினைக்கும் பலரும் நீண்ட நேரம் அமர்வதால் உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்