17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்..கொதித்தெழுந்த மக்கள் போராட்டம்...| Karnataka
கர்நாடகாவில் 17 வயது கல்லூரி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஷிமோகா நகரில் உள்ள பிரபல கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான கல்லூரியில் படிக்கும்17 வயது மாணவிக்கு, தேவாலயத்தின் பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாடஸை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே அந்த பாதிரியாருக்கு எதிராக, அவரது சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிரியார் மீது இதேபோல் ஏராளமான புகார்கள் இருப்பதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..