ஆபத்தில் உதவும் பொக்லைனே அபாயத்தில் சிக்கியது- ஓடி வந்து உதவிய நண்பன் - பரபரப்பு காட்சி
மதுரை வைகை அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைகை ஆற்றின் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொக்லைன் இயந்திரம் சிக்கிகொண்டது. இதனையடுத்து ராட்சத பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு வெள்ளப்பெருக்கில் சிக்கிய பொக்லைன் இயந்திரத்தை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது