"1 நொடி உசுரு போய் வந்துச்சு".. பட ஷூட்டிங்கில் விபரீதம்.. தமிழ் சினிமாவை கதிகலங்கவிட்ட இயக்குனர் சுசீந்திரன் வீடியோ
பழனி அருகே படப்பிடிப்பின்போது இடி விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 லைட் மேன்கள் உயிர்தப்பியதாக இயக்குநர் சுசீந்தரன் உருக்கமாக தெரிவித்துள்ளார். கணக்கம்பட்டியில் மார்கழி திங்கள் என்ற படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து மிகப்பெரிய குடை லைட்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென இடியுடன் மழை பெய்ததால், ஒரு லைட் மீது இடி விழுந்துள்ளது. அப்போது, அங்கு இருந்த 5 லைட் மேன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியதாக இயக்குநர் சுசீந்திரன் உருக்கமாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.