இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (12-10-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-12 15:44 GMT

பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டம்...

பாலஸ்தீன், லெபனானை தொடர்ந்து சிரியா மீதும் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியதால் பதற்றம்...

இஸ்ரேலை தாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை...


காசாவில் உள்ள ஹமாஸ் கமாண்டோ படையின் தலைமை அலுவலகத்தை தாக்கி அழித்தது இஸ்ரேல்...

ஹமாஸ் படையில் உள்ள கடைசி நபரை அழிக்கும் வரை போர் ஓயாது என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்...


இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டம்...

முதல் சிறப்பு விமானம் இன்றிரவு டெல் அவிவ் சென்றடையும் என வெளியுறவுத் துறை அறிவிப்பு...

தமிழர்கள் உட்பட 230 இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு...

Tags:    

மேலும் செய்திகள்