விளையாட்டு திருவிழா - 06.09.2018 - இந்தியா Vs இங்கிலாந்து நாளை கடைசி டெஸ்ட்

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

Update: 2018-09-06 14:47 GMT
இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.  தொடரை இந்தியா ஏற்கனவே 3க்கு1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இதற்காக லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடரை இழந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

தொடக்க வீரராக UNDER 19 இந்திய அணியின் கேப்டனாக இருந்த பிரித்திவி ஷாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.14 முதல் தர போட்டியில் விளையாடி ஆயிரத்து 418 ரன்கள் குவித்தார். இங்கிலாந்துக்கு கடந்த மாதம் இந்திய ஏ அணியில் விளையாடிய அவர் 188 ரன்கள் விளாசி இருந்தார்.

அடுத்ததாக ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு, HANUMA VIHARI க்கு நடுவரிசையில் வாய்ப்பு வழங்க வேண்டும்.  தற்போது விளையாடும் வீரர்களிலேயே இவர் தான் அதிக சராசரி ரன்களை குவித்தவர். இவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜொலித்தவர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு ஏதுவான பேட்டிங் நுணுக்கங்களுடன் விளையாடக் கூடியவர். ஐதராபாத்தை சேர்ந்த விஹாரி,  VVS LAXMAN போல் வலம் வர வாய்ப்பு உள்ளது. 

காயத்தால் அவதிப்படும் வரும் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவுக்கும் வாய்ப்பு வழங்கலாம். திறமையான இளம் வீரர்களுக்கு ஒரு முறையாவது வாய்ப்பு அளித்தால் மட்டுமே அவர்கள் திறமை வெளிப்படும். ஆனால் கோலி, ரவி சாஸ்திரி இதனை செய்யுமா என்ற கேள்வி மட்டுமே அனைவரின் மனதிலும் உள்ளது. 

உலகின் மிக ஆபத்தான பைக் பந்தயம்:

HARE SCRAMBLE பந்தயம். உலகின் மிகவும் கடினமான, ஆபத்தான பைக் பந்தயம். அப்படி என்ன விசேஷம் என்றால், இந்தப் பந்தயம் சாலையில் நடைபெறாது. கரடு முரடான பாதையில் தொடங்கி, மலையில் பயணம் செய்து, காடுகள் வழியாக பந்தயம் நடைபெறும்

4 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பந்தயத்தின் தூரம் வேறுப்படும். பலத்த பாதுகாப்பு உபகரணங்களோடு தான் இந்த பந்தயத்தை மேற்கொள்ள முடியும். உயிரை பனைய வைக்கும் இந்தப் போட்டியின் முக்கிய அம்சமே சாகசம் தான்.

மோட்டார் சைக்கிளிலேயே பிறந்து, மோட்டார் சைக்கிளிலேயே வளர்ந்தவர்களால் மட்டும் தான் இந்த பந்தயத்தில் பங்கேற்க முடியும். ஏன் என்றால் அந்த அளவுக்கு வீரர்களின் திறமையை இந்தப் பந்தயம் சோதினை மேற்கொள்ளும். உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று போட்டியாளர்களை ஏ,பி,சி. என்று திறமை, அனுபவம் அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்படுவார்கள். 

பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் HARE SCRAMBLE பந்தயம் மிகவும் பிரபலம். இந்த பந்தயத்தில் மிகவும் பிரபலமான வீரர் இங்கிலாந்தை சேர்ந்த GRAHAM JARVIS. கடைசியாக ஆஸதிரியாவில் நடைபெற்ற பந்தயத்தில் இவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : மேடிசன் கீ அரை இறுதிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீ, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் ஜப்பான் வீராங்கனை NAOMI OSAKA  அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை MADISON KEY -  வும் , ஸ்பெயின் வீராங்கனை CARLA SUAREZவும் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் MADISON KEY  6க்கு 4, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரை இறுதிக்கு முன்னேறினார்.


ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா முன்னேற்றம்


மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை NAOMI OSAKA - ஐ உக்ரைன் வீராங்கனை LESIA TSURENKO எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில், NAOMI OSAKA 6க்கு1, 6 க்கு1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 22 ஆண்டுகளில் ஜப்பான் வீராங்கனை ஓருவர், அமெரிக்க ஒபன் டென்னிஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது, இதுவே முதல் முறை. 


அரையிறுதிக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்


ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் DJOKOVICம், ஆஸ்திரேலியாவின் JOHN MILLMAN ரும் மோதினர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் DJOKOVIC வெற்றி பெற்று, அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில், குரோஷிய வீரர் மரின் சிலிக், ஜப்பான் வீரர் NISHIKORI , - ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4 மணி நேரம் போராடி, NISHIKORI வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் : 2-0 கணக்கில் இலங்கையை வென்றது இந்தியா

தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. 7 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறுகிறது. சுனில் செத்ரி, Jeje உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இன்றி, முற்றிலும்  இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : 16 வயது இந்திய வீரர் சௌரப் தங்கம் வென்றார்

தென் கொரியாவில் நடைபெற்று வரும்  உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் சவுரப் 245 புள்ளி 5 புள்ளிகள் குவித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த வாரம் சௌரப் ஆசிய போட்டியில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் அர்ஜூன் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப், பாட்டில் ஜோடி வெண்கலம் வென்றது. 

உலக அலைச்சறுக்கு ஆடவர், மகளிருக்கு இனி ஒரே பரிசுத் தொகை:

அலைச்சறுக்கு போட்டியில் இனி சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே அளவில் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உலக அலைச்சறுக்கு சம்மேளனம் அறிவித்துள்ளது. பெண்களை விட ஆண்டுகளுக்கு அதிக பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த பிரிவினையை அழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அலைச்சறுக்கு சம்மேளனத்தின் இந்த அறிவிப்புக்கு வீராங்கனைகள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

 "பீட்டர்சனை நீக்கியது தவறான முடிவு" : வருத்தம் தெரிவித்த அலெஸ்டர் குக்:

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக இருந்த பீட்டர்சன் நீக்க எடுத்த முடிவை நினைத்து தாம் வருத்தப்படுவதாக அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். பீட்டர்சன் நீக்கும் முடிவை தவிர்த்திருந்தால், இங்கிலாந்து கிரிக்கெட்க்கு அது நன்மையாக இருந்து இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போய்விட்டது என்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ள குக் வருத்தம் தெரிவித்துள்ளார்




Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை