விளையாட்டு திருவிழா 02.08.2018 - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இங்கிலாந்து 287 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பதிவு: ஆகஸ்ட் 02, 2018, 08:51 PM
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் அஸ்வின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் 285 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. மேலும் 2 ரன்களே சேர்த்த நிலையில், கடைசி விக்கெட்டையும் இங்கிலாந்து பறிகொடுத்து 287 ரன்களுக்கு வெளியேறியது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.