திடீரென நடுரோட்டில் ஓடிய யானை.. அதிர்ச்சியில் அமெரிக்க வாசிகள்

Update: 2024-04-18 04:32 GMT

திடீரென நடுரோட்டில் ஓடிய யானை.. அதிர்ச்சியில் அமெரிக்க வாசிகள்

#america #elephant #thanthitv

அமெரிக்காவில், சர்க்கசிலிருந்து தப்பிய யானை ஒன்று நகர வீதிகளில் அலைந்து கொண்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொன்டானா மாகாணத்தின் புட்டே நகர வீதிகளில் யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, வீதியில் சுற்றிய யானையை ஒரு நபர் அழைத்துச் செல்லும் வீடியோவும் கிடைந்ததது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சர்க்கஸ் ஒன்றிலிருந்து தப்பிய யானை என்பதும், பின்னர், சர்க்கஸ் நிர்வாகிகள் அதனை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்