தென் கொரியாவின் தேசிய ராணுவ தினம்: ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள்

தென் கொரியாவில் தேசிய இராணுவ தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-04 09:42 GMT
நாட்டின் 73வது இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நிலையில், கடற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட படை வீரர்கள் சாகசங்கள் நிகழ்த்தினர். இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், வட கொரியா என்ற பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக, நாட்டு மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு தென் கொரிய இராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்