"இந்திய-அமெரிக்க உறவு புதிய உயரம் தொடும்" - அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் இந்திய - அமெரிக்க உறவு புதிய உயரங்களைத் தொடும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.;

Update: 2021-09-24 03:33 GMT
இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார்.

தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் பழமையான குடியரசு நாடுகள் என்றும், இரு நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாக கூறிய மோடி,

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வலுவான மக்கள் தொடர்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான பாலமாக திகழ்வதாக கூறினார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நிர்வாகத்தில் இந்திய - அமெரிக்க உறவு புதிய உயரங்களைத் தொடும் என்று நம்பிக்கை தெரிவித்த மோடி,

கமலா ஹாரிஸை வரவேற்க இந்திய மக்கள் காத்திருப்பதாகவும், அவர் இந்தியா வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

கொரோனா இரண்டாவது அலையின்போது, இந்தியாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக அமெரிக்காவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்