ஆப்கானின் அடுத்த அதிபர் அப்துல் கனி பரதர்?.. இடைக்கால அரசு இல்லை - தலிபான்கள்

ஆப்கானின் அடுத்த அதிபர் அப்துல் கனி பரதர்?.. இடைக்கால அரசு இல்லை - தலிபான்கள்

Update: 2021-08-16 17:35 GMT
ஆப்கானின் அடுத்த அதிபர் அப்துல் கனி பரதர்?.. இடைக்கால அரசு இல்லை - தலிபான்கள் 

தாலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தாலிபன் வசமாகியுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்து வந்த அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.  இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அஹ்மத் ஜலாலி  தலைமையில் இடைக்கால அரசு அமையும் என்று தகவல் வெளியானது. அதனை தலிபான்கள் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே முல்லா அப்துல் கனி பரதர் என்பவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக நியமிக்கப்படுவார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களுள் ஒருவராக கூறப்படும் அப்துல் கனி பரதர்,  தற்போது தாலிபன்களின் அரசியல் பிரிவுத் தலைவராக உள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு  முன் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் தாலிபன்கள் கையெழுத்திட்டதை இவர் மேற்பார்வை செய்தாகவும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்