கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டவர்கள்; முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

Update: 2021-05-14 05:48 GMT
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு தவணையும் செலுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக்ககவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்