ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.;
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதில் சீனாவை தவிர்த்து 88 நாடுகளில் 17 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் சீனாவை தவிர வெளிநாடுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார துறை அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவை தவிர்த்து வெளிநாடுகாளில் 335 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.