"மீனவர் பிரச்சனையை அரசியலாக்குவதால் வேதனை" - இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர்

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க தமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.;

Update: 2019-12-15 20:45 GMT
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி விரட்டி அடிப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ள இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் சூரிய பண்டார, தமிழக மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாட்டால் இலங்கைக்குள் கேரள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலகுவாக கொண்டு வரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மீனவர் பிரச்சனையை வைத்து தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்வது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க வேண்டாம் என இந்திய மீனவர்களுக்கு தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்