"கச்சா எண்ணைய் விலை உயரும்" - உலக நாடுகளுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கா விட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணைய் விலை உயரும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.;

Update: 2019-09-30 21:32 GMT
ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கா விட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணைய் விலை உயரும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார். துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்படி விலை உயரும் பட்சத்தில், சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து விடும் என்றார்.  ராணுவத்தை விட, அரசியல் மற்றும் அமைதி வழியில், தீர்வு காண்பது சிறப்பானது என்று சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்