பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்
பிரக்சிட் மசோதா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் தெரசா மே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.;
பிரக்சிட் மசோதா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம், தெரசா மே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற சில மாதங்களுக்குள் பிரக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பிலிப் லீ என்பவர், லிபரல் கட்சிக்கு மாறியதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால், பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தார்மீக உரிமையை இழந்த ஆளும் ஜான்சன் அரசு - எதிர்கட்சித்தலைவர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் இது தொடர்பான விவாதம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ஜெரிமி கார்பின், ஜான்சனின் அரசு, அரசாளும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். அப்போது, பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போதைக்கு பொதுத்தேர்தலை சந்திக்க தாம் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.