அரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து - கிறிஸ்டின் லகார்டே எச்சரிக்கை

அரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார்.

Update: 2019-02-10 00:45 GMT
அரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார்.  துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,   2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார சரிவுக்கு பின்னர் அரபு நாடுகளின் கடன் அதிகரித்துள்ளதுடன், கடும்  நிதிப் பற்றாக்குறையிலும்  உள்ளன.   இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்தாலும்,  கடந்த பத்து ஆண்டுகளில் இவற்றின் பொருளாதாரம் மேம்படாமல் இருக்கிறது என்றும், கடன் அதிகரித்தால் உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்